Posts

Showing posts from October, 2020

ஆயிரத்தோரு மின்மினிகள் - சிறுகதை.

Image
  "முற்றும்" எனத் தொடங்கும் அக்கதையை தஞ்சாவூர் ஓவியங்கள் வார்க்கப்பட்ட பச்சைவண்ண சன்னல் திரைச்சீலையின் அருகில் அமர்ந்து பிரபு கூற ஆரம்பித்த அந்நாளில்  சுபாஷினிக்கு புதிதாய் பால் பரு ஒன்று முளைத்திருந்தது. அதனோடு அவளது சுடுமண் நிற நெற்றியில் சிறு செந்தூரக் கீறல். அதே வண்ணத்தின் அடர்த்தியில் பருத்தியில் நெய்த சுடிதார். சித்திரச் சுரூபமாய் பார்த்துக்கொண்டிருந்தவளிடமிருந்து இடையிடையே "ம்ம்ம்" "ஆயிரம் இம்மிட்ட அதிரூப சுந்தரியே"  பிரபு கதையிலிருந்து சற்று வெளியேறி நகைத்தான்.  இம்முறை அவளிடம் ம்ம்முடன் சேர்த்து சிறு தலையசைப்பு.  முற்றும் எனத் தொடங்கும் அக்கதையை சாளரத்தை உரசி நின்ற பிறை நிலாவைப் பார்த்தபடி பிரபு கூற ஆரம்பித்தபோது சுவரை ஒட்டி அமர்ந்திருந்த சுபாஷினியின் மலர்க் குழலை நோக்கி மின்மினிப்பூச்சியொன்று தயங்கியபடி ஊர்ந்தது. அந்த மின்மினிப்பூச்சி  ஒருமுறை தனக்கு ஆயிரத்தோரு மின்மினிகள் வேண்டுமென அவர்களது மகள் பூங்கோதை அடம்பிடித்துக் கேட்டதன்பேரில், அவன் ஆறு மாதங்கள் வனவாசம் சென்று பிடித்து வந்தவையுள் கடைசி மிச்சம். மற்ற ஆயிரத்தையும் அவன் வீட்டிற்குள் கொண்டு வ